Posts

Showing posts from 2015

மழை

சின்ன சின்ன துளிகளாய் மண்ணில் வந்து வீழ்வாய் சின்னஞ் சிறுக் குழந்தைகள் சிரித்து மகிழ வருவாய் வண்ண வண்ண பூக்கள் பூத்து குலுங்க வருவாய் வயல்கள் செழிக்க வருவாய் விவசாயிகள் மனமகிழ வருவாய் உன்னை வெறுத்து ஒதுக்குபவர் உலகில் யாரும் இல்லை உன்னைப் பார்த்து ரசித்த அந்த சில நிமிடங்கள் கனவாய் வந்து நிற்கும் கலைந்துபோகாமல்.........                -சு.கஸ்தூரி

வகை (2) சுற்றுப்புறச் சூழல் – கட்டுரைப் போட்டி – 2015

சுற்றுப்புறத் தூய்மையே வாழ்வுதரும் முன்னுரை ‘சுத்தம் சோறு போடும்’ என்பது பழமொழி. இப்பழமொழி தூய்மையின் அவசியத்தை நமக்கு உணர்த்துகிறது. மக்கள் அனைவரும் தூய்மையான சூழ்நிலையையே விரும்புகிறார்கள். தன்னையும் தன் வீட்டையும் மட்டும் தூய்மையாக வைத்துக்கொண்டால் போதாது. தன் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். சுற்றுப்புறங்களைத் தூய்மையாகத் வைத்திருந்தால்தான் நோய் வராது. இல்லையென்றால் தொற்று நோய்கள் பரவி உடல் நலத்தைப் பாதிக்கச் செய்துவிடும். வீடு தூய்மையாக இருந்தால் தான் ஊர் தூய்மையாக இருக்கும். ஊர் தூய்மையாக இருந்தால்தான் நகரம் தூய்மையாக இருக்கும். நகரம் தூய்மையாக இருந்தால் தான் நாடே தூய்மையாக இருக்கும். இதைத்தான் ‘சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு’ என்கிறோம். சுற்றுப்புறத் தூய்மைக் கேடு குறித்தும், அதனை எவ்வாறு நீக்க வேண்டும் என்பது குறித்தும் இக்கட்டுரை முன்வைக்கின்றது. வள்ளுவர் கூறும் தூய்மை             புறந்தூய்மை நீரால் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும் என்ற குறளில் (29 8) வள்ளுவர், தூய்மை இருவகைப்படும் என்கின்றார். ஒன்று: அகந்தூய்மை. மற்றொன்று: புறந