Posts

Showing posts from 2017

யாதுமாகி நின்றாள்

பெண்ணே , சுய நலம் ஒழித்து பொது நலம் காத்து அன்பான முகப்பொலிவில் அழகு சேர் ...... நாணத்தோடு சகிப்புத்தன்மையும் அணிகலனாய் ...... சிந்தித்துச் செயல்படும் பக்குவத்தோடு அனைத்தையும் தாங்கும் சக்தி கொண்டு பிறப்பளித்து வாழ்வளிக்கும் உனக்கு நிகர் எவரும் இல்லை ......                                                 சு. கஸ்தூரி

நகர பேருந்துப் பயணம்

இனம் பார்க்காத இன்பம் நகரப் பேருந்தில் காற்றைப்போல் மாறும் எண்ண அலைகள் வேலைப்பழுவால் வருத்தம் நெரிசலால் கோபம் சாலை அறியும் எண்ணம் மெல்ல வருட மென் தூக்கம் செல்பேசியில் செவிமடுக்கும் பேச்சு நிறுத்தம் அறியும் பதற்றம் ஆபத்தை அறியா இளசுகளின் படிப்பயணம் – இது நடத்துனரின் அன்றாடம் நிகழ்வுகள் நினைவுகளாய்...                   -சு.கஸ்தூரி

மலரே பேசு!

மலரே நீ பேசு!! உன்னை ரசித்துச் செல்லும் மனிதர்கள் பல பல... செயலும் எண்ணமும் பல பல... உன்னைக் கிள்ளினாலும் சிரிப்பாய்... அனைவருக்கும் இன்பம் அழிப்பாய் வண்ணங்களும் வசந்தங்களும் பல பல... ஒரு நாட்பொழுதில் தோன்றி மறைவதால் உனக்கு ஏதேனும் வருத்தம் உண்டோ ???                             - சு.கஸ்தூரி