Posts

Showing posts from June, 2020

மீழ்வோம் மனிதர்களாய்...

சாலை எங்கும் முகமூடி கொள்ளையர்கள்              ஜாக்கிரதை என்ற நிலவரம் மாறி... சாலையில் முகமூடி கொள்ளையர்களாக               மக்கள் அனைவரும்... புறந்தூய்மை அவசியம் என்பதை உணராத               பலருக்கு ஓர் நுண்ணுயிரி... புறந்தூய்மை இல்லையேல் வாழ்க்கை இல்லை             என்று உணர்த்துகிறது... அவசியத்தை விடுத்து ஆடம்பரம்              என்ற அனாவசியத்தில் திலைத்தவர்கள்... அனாவசியத்தை விடுத்து அத்தியாவசியத்தை             மட்டுமே நாடுகிறார்கள்... தன் சுயநலத்தை  பாராமல் பிறர் நலனையும்              உணர்ந்து செயல்படும் எண்ணமும்... தன்னிடம் இருக்கும் பொருளை இல்லாதவர்களுக்கு             பகிர்ந்து உதவும் குணத்தையும் தூண்ட...