மீழ்வோம் மனிதர்களாய்...

சாலை எங்கும் முகமூடி கொள்ளையர்கள்        
     ஜாக்கிரதை என்ற நிலவரம் மாறி...
சாலையில் முகமூடி கொள்ளையர்களாக         
     மக்கள் அனைவரும்...

புறந்தூய்மை அவசியம் என்பதை உணராத        
      பலருக்கு ஓர் நுண்ணுயிரி...
புறந்தூய்மை இல்லையேல் வாழ்க்கை இல்லை      
      என்று உணர்த்துகிறது...

அவசியத்தை விடுத்து ஆடம்பரம்        
     என்ற அனாவசியத்தில் திலைத்தவர்கள்...
அனாவசியத்தை விடுத்து அத்தியாவசியத்தை       
     மட்டுமே நாடுகிறார்கள்...

தன் சுயநலத்தை  பாராமல் பிறர் நலனையும்        
     உணர்ந்து செயல்படும் எண்ணமும்...
தன்னிடம் இருக்கும் பொருளை இல்லாதவர்களுக்கு       
     பகிர்ந்து உதவும் குணத்தையும் தூண்டுகிறது...

உடனிருக்கும் உறவின் அருமை அறியாது சமூக       
     வலைதளங்களில் உலாவி வந்தவர்களுக்கு... 
உடன் இருபவர்களோடு நேரத்தை செலவிட ஒரு 
     வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது அந்த நுண்ணுயிரி...

ஊரெங்கும் உதவும் மனப்பான்மை வளர்கிறது..
    நாடெங்கும் நலனில் அக்கறை பெருகுகிறது...
உலகெங்கும் மனிதநேயம் ஓங்குகிறது..
     நுண்ணுயிரி தாக்கத்தில்லிருந்து மீண்டு எழுவோம்     
     மனிதர்களாய்...
    
                                            -  கஸ்தூரி சுந்தரமூர்த்தி

Comments

Popular posts from this blog

வகை (2) சுற்றுப்புறச் சூழல் – கட்டுரைப் போட்டி – 2015

செல்லம்மா...

யாதுமாகி நின்றாள்