செல்லம்மா...




உன் அன்னை தாய்மை உணர
கருவில் பூத்து
உன் அன்னையின் ஏக்கத்திற்கு
கிடைத்த வரம் நீ!
உன் அப்பாவின் மனதிலோ
இருவரையும் காக்கும் வலி
உன்னை கண்ட நொடியிலோ
கண்களில் ஆனந்ததுளிகள்!
உன் பிஞ்சு முகம் மென்மையான மேனி
சிறிய விரல்கள் பொலிவான கண்கள்
உன் முகமெல்லாம் மயக்கும் சிரிப்போடு
கள்ளமில்லா அன்பினால் அடிமையாக்கினாய்!
உன் சின்ன பாதங்களை சுவைத்து
தத்தித்தாவி , நீந்தி, தவழ்ந்து
உன் தலையை தூக்கி எங்களை தேடி
அளப்பரியா மகிழ்ச்சி அளித்தாய்!
உன் கால்களை விரித்து அமர்ந்து
மெல்ல மெல்ல விழுந்தும் எழுந்துமாய்
உன் முதல் அடிகளை வைத்து
நடக்கும் எங்கள் வீட்டு செல்வமே...
உன்னை காண்கையில் எத்தனை இன்பம்!
உன் நிகழ்வுகள் எங்கள் நினைவுகளாய் . . .


                                    - கஸ்தூரி சுந்தரமூர்த்தி


@kasthuri


Comments

Popular posts from this blog

வகை (2) சுற்றுப்புறச் சூழல் – கட்டுரைப் போட்டி – 2015

யாதுமாகி நின்றாள்