நகர பேருந்துப் பயணம்

இனம் பார்க்காத இன்பம்
நகரப் பேருந்தில்
காற்றைப்போல் மாறும்
எண்ண அலைகள்
வேலைப்பழுவால் வருத்தம்
நெரிசலால் கோபம்
சாலை அறியும் எண்ணம்
மெல்ல வருட மென் தூக்கம்
செல்பேசியில் செவிமடுக்கும் பேச்சு
நிறுத்தம் அறியும் பதற்றம்
ஆபத்தை அறியா
இளசுகளின் படிப்பயணம் – இது
நடத்துனரின் அன்றாடம்

நிகழ்வுகள் நினைவுகளாய்...

                  -சு.கஸ்தூரி

Comments

Popular posts from this blog

வகை (2) சுற்றுப்புறச் சூழல் – கட்டுரைப் போட்டி – 2015

யாதுமாகி நின்றாள்

மலரே பேசு!